சுந்தா செல்ஃபு சதுப்புநிலங்கள்
சுந்தா செல்ஃபு சதுப்புநில சூழல் மண்டலம் (Sunda Shelf mangroves ecoregion)[1] போர்னியோ தீவுகள், மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் கிழக்கு சுமத்ரா தீவுகளின் கடற்கரையின் தனித்துவ சதுப்புநில உயிரியல் பகுதிகளில் உள்ளது.[2] இப்பகுதிகள் நீள் மூக்கு குரங்குகளின் தாயகமாகும்.
நிலப்பரப்பு மற்றும் கடல் வனவிலங்குகளுக்கு முக்கியமான வாழ்விடமாக இருப்பதுடன், இச்சதுப்புநிலங்கள் கடற்கரையின் வடிவத்தை பாதுகாக்கின்றன.
தாவரங்கள்
தொகுஉலகின் பெரும்பாலான சதுப்புநிலக் காடுகளை விட இங்கு அதிகமான தாவர இனங்கள் உள்ளன. ஐந்து வெவ்வேறு வகையான சதுப்புநிலங்கள் பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன: பூக்கும் தாவர வகைகளான அவிசென்னியா மற்றும் சோனெரேசியா இனங்கள் அதிக உப்புத்தன்மை நீரும் வலிமையான அலைகளும் கொண்ட கடற்கரைகளில் உள்ளன. இவற்றுக்குப் பின்னால் உள்ள சதுப்புநிலங்களில் ரைசோபோரா எனப்படும் வெப்பமண்டல சதுப்புநில மரங்களின் இனமும், புருகுயேரா எனப்படும் சதுப்புநில சிற்றினத் தாவரங்களும் கானப்படுகின்றன. நைபா புரூடிகன்சு பனை இனங்கள் நன்னீர் ஓடைகளிலும் உள்நாட்டிலும் காணப்படுகின்றன.
விலங்குகள்
தொகுபுரோபோசுகிசு குரங்கு எனப்படும் நீள்மூக்கு குரங்குகள் இப்பகுதிகளில் காணப்படும் பாலூட்டி வகை விலங்கினமாகும். இக்குரங்குகள் இத்தகைய சதுப்பு நில கடற்கரை வாழ்விடங்களில் மட்டுமே வாழ்கின்றன. பறவைகளிலும் பல இனங்கள் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு
தொகுவிறகு, விவசாயம், இறால் வளர்ப்பு போன்ற கிராம, நகர்ப்புற மேம்பாட்டிற்காகவும் நிலத்தை சுத்தப்படுத்துவதற்காகவும் மரங்கள் வெட்டப்படுவதால் இந்த சதுப்புநிலங்கள் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளன. மலேசியாவின் போர்னியோ பாகோ தேசிய பூங்கா, இந்தோனேசியாவில் உள்ள தஞ்சங் புட்டிங் மற்றும் குனுங் பலுங் தேசிய பூங்காக்கள், சுமத்ரா பெர்பாக் மற்றும் செம்பிலாங் தேசிய பூங்காக்கள் உட்பட ஏராளமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சதுப்புநிலங்கள் ஒரு பகுதியாக இருந்தாலும் உயிரினங்களின் வாழ்விட இழப்பு நீடிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sunda Shelf Mangroves". One Earth (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
- ↑ "World Species : Ecoregion : Sunda Shelf mangroves". worldspecies.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.