சுனந்தா காந்தி
சுனந்தா காந்தி என்பவர் ( 1932-2007) எழுத்தாளராகவும், ஆராய்ச்சியாளராகவும், செவிலியராகவும், மற்றும் அவரது கணவர் அருண் காந்தியுடன் இணைந்து எம்.கே நிறுவனத்தின் இணை நிறுவனரகவும் இருந்தார். 25 வருடங்களுக்கும் மேலாக, பப்னுகர் உடன் இணைந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்களின் உரிமையை பாதுகாக்கும் நிறுவனத்துடன் இணைந்து விரிவாக பணிபுரிந்தார். அவர் மற்றும் அருண், நண்பர்களுடன் சேர்ந்து சமூக ஒற்றுமைக்கான இந்திய மையம் ஒன்றை நிறுவி அதில், இந்தியாவின் கிராமப்புற ஏழைகளுக்கு சுய உதவிகளை அளித்து பொருளாதாரத்தையும் வளர்த்து அவர்களின் வறுமை சுழற்சியை உடைத்து, குழந்தைகள் வீட்டிலும் மற்றும் பள்ளியிலும் பாதுகாப்பாக இருக்கவும் உதவியது. 1985 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பம்பாயிலிருந்து வெளியிடப்பட்ட சுபர்பன் எக்கோ என்ற செய்தி வார இதழில் எடிட்டராக இருந்து உதவினார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அருணா காந்தியை சந்தித்தார். அவர் செவிலியராக பணியாற்றினார். இதன் விளைவாக ஒரு உறவு மலர்ந்தது. சுனாந்தவின் குடும்பம் பிரித்தானிய ஆட்சியை ஆதரித்ததோடு, மகாத்மா காந்தியின் வேலையை ஆதரிக்கவில்லை என்பதால் அந்த தம்பதிகள் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது. இந்த தம்பதிகள் இருவரும் ஃபர்காட்டன் உமன் என்ற புத்தகத்தை எழுதினார். இது கஸ்தூரிபா காந்தியின் ஒரே சரிதை ஆகும்.பின்னர் காந்தி நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார். பிப்ரவரி 2007 இல் அவர் மறைந்தார்.
குறிப்புகள்
தொகு- காந்தி நிறுவன தளத்தின் சுயசரிதை.