சுனில் தியோதர்

இந்திய அரசியல்வாதி

சுனில் தியோதர் (Sunil Deodhar) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மராத்தி மொழி பத்திரிகையாளர் வி நா தியோதரின் மகனான சுனில்[1] 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான இவர் ஆர்.எசு.எசு. அமைப்பின் பிரச்சாரகராகவும் உள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியின் பிரச்சார மேலாளராகவும் பணிபுரிந்தார். வட-கிழக்கு இந்தியாவின் என் வீடு இந்தியா என்ற இலாப நோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சுனில் தியோதர் நிறுவினார்.[2][3][4][5]

2020 ஆம் ஆண்டில் சுனில் தியோதர்

மேற்கோள்கள் தொகு

  1. "Sunil Deodhar, the Mumbai man behind BJP's Tripura win". Mumbai Mirror. 4 March 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  2. "Who is Sunil Deodhar, the man who led the BJP campaign in Tripura?". இந்தியா டுடே. 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  3. "The man who changed his food habits for BJP win". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  4. "Meet Sunil Deodhar, the Man Who Changed the BJP's Fate in Tripura". Sangeeta Barooah Pisharoty. The Wire. 15 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  5. "BJP's poll warrior Sunil Deodhar says his party is on the upswing in Bengal". Moumita Chaudhuri. Telegraph India. 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 3 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_தியோதர்&oldid=3743424" இலிருந்து மீள்விக்கப்பட்டது