சுபத்ரா அதிகாரி

நேபாள நடிகைகள்

சுபத்ரா அதிகாரி (Subhadra Adhikari) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார்.1947/1948-2019 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார்.[1]திரை, சின்னத்திரை, மேடை நாடகங்களில் சுபத்ரா நடித்தார்.[2]ஒரு பாடகியாகவும் பாடல்கள் பாடினார். அறுபது ஆண்டுகளாக நீடித்த சுபத்ராவின் திரை வாழ்க்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நடித்தார். டம் மான்கோ பந்த் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் இவர் அறிமுகமானார். சினோ, கன்யாடன், பாசுதேவ், பசந்தி, முனா மதன், இசுவர்கா, சௌபாக்யா மற்றும் பேடோ முனிகோ பூல் போன்றவை சுபத்ரா தொடர்ந்து நடித்த சில படங்களாகும்.[3]திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சனாதிபதி பித்யா தேவி பண்டாரி அவர்கள் சலசித்ரா திர்கா சாதன சம்மான் விருதை வழங்கி சிறப்பித்தார். விருதானது ரூபாய் 351,111 ரொக்கப் பரிசு கொண்டதாகும்.[4]

சுவாசப் பிரச்சினை காரணமாக சுபத்ரா அதிகாரி தனது 72 ஆவது வயதில் காட்மாண்டுவில் இறந்து போனார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Veteran actress SubhadraAdhikari no more". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-17. பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
  2. "रहिनन्वरिष्ठअभिनेत्रीसुभद्राअधिकारी". ImageKhabar. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  3. "अस्ताइन्अभिनेत्रीशुभद्राअधिकारी". अस्ताइन्अभिनेत्रीशुभद्राअधिकारी (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  4. "अभिनयकोउचाइमाचिनोगाड्नेभद्रसुभद्रा". News of Nepal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபத்ரா_அதிகாரி&oldid=3407978" இலிருந்து மீள்விக்கப்பட்டது