சுபன்சிரி ஆற்றுப் பாலம்

சுபன்சிரி ஆற்றுப் பாலம் (Subansiri river bridge) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுபன்சிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்திய சீன கட்டுப்பாட்டு எல்லைகளைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் எல்லைச் சாலை அமைப்பு இப்பாலத்தைக் கட்டியுள்ளது.[1] பாலத்தை அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.[2][3][4] சுபன்சிரி ஆற்றின் இருபுறமும் உள்ள டபோரியோ மற்றும் பிற கிராமங்களை இணைப்பதில் பாலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.[4] இவர்களுக்கு இடையேயான ஒரே தகவல் தொடர்பு ஊடகமாகவும் இப்பாலம் திகழ்கிறது.[2] 430 அடி நீளம் கொண்ட இப்பாலத்திற்கு[5] புனரமைப்பு தேவைப்பட்ட போது ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமானம் மார்ச் 17 அன்று தொடங்கி[2] 27 நாட்களில் ஏப்ரல் 14 அன்று முடிக்கப்பட்டது.[1][3][4][5] புனரமைப்பிற்குப் பிறகு, பாலம் 40 டன் கனரக வாகனங்களுக்குப் பயன்படுகிறது.[3] முன்னதாக இந்த அளவு 24 டன்னாக இருந்தது.[1][4][5] சம்மு காசுமீர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு தனது இன்னுயிரை இழந்த தியாகியான ஆங்பான் தாதாவின் நினைவாக பாலத்திற்கு அவர் பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Key bridge in Arunachal completed in record time" (in en-IN). The Hindu. 2020-04-21. https://www.thehindu.com/news/national/key-bridge-in-arunachal-completed-in-record-time/article31392370.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 Singh, Bikash. "Arunachal CM inaugurates Hangpan Dada Bridge over River Subansiri through video conferencing". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/arunachal-cm-inaugurates-hangpan-dada-bridge-over-river-subansiri-through-video-conferencing/articleshow/75250114.cms. 
  3. 3.0 3.1 3.2 Roche, Elizabeth (2020-04-20). "BRO finishes construction of key bridge over Daporijo river in Arunachal Pradesh". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  4. 4.0 4.1 4.2 4.3 "Amidst lockdown strategically important bridge over Subansiri river in Arunachal inaugurated". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  5. 5.0 5.1 5.2 Gurung, Shaurya Karanbir. "Border Roads Organisation constructs strategic bridge in Arunachal Pradesh". Economic Times. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபன்சிரி_ஆற்றுப்_பாலம்&oldid=3413068" இலிருந்து மீள்விக்கப்பட்டது