சுபாஷ் பலேகர்

சுபாஷ் பலேகர் இந்தியாவின் இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் Zero Budget Firtual Farming[1] என்ற இயற்கை வழி விவசாயத்தை நடைமுறைப்படுத்தியும் அதைப்பற்றி பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.சுபாஷ் பலேகர் 1949 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியிலுள்ள பெலோரா எனும் சிறிய கிராமத்தில் பிறந்த விவசாயப் பின்னனியைக் கொண்டவராவார்.இவர் எந்த இரசாயன பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தாத Zero Budget Firtual Farming எனும் இயற்கை வழி விவசாயத்தை நடைமுறைப்படுத்தி பயிர்களை உற்பத்தி செய்தார்.இவர் இந்தியா முழுவதும் பல கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கல்வி மற்றும் தொழில் தொகு

இவர் நாக்பூரில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பயின்றார்.அவர் கல்லூரி படிப்பின்போது சட்பூடா பழங்குடி பகுதியிலுள்ள பழங்குடி மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டார். 1972 இல் அவர் தந்தையுடன் விவசாயத்தில் இணைந்தார். அவர் தந்தை ஒரு இயற்கை விவசாயி. ஆனால் கல்லூரியில் இரசாயன விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு தன் பண்ணையிலும் இரசாயன விவசாயத்தைத் துவக்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-05-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_பலேகர்&oldid=3555072" இலிருந்து மீள்விக்கப்பட்டது