சுபா ஜெய்
சுபா ஜெய் (Shuba Jay) என அழைக்கப்படும் சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam, 15 சூலை 1976 – 17 சூலை 2014) மலேசிய தொலைக்காட்சி நடிகையும், திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.
சுபா ஜெய் Shuba Jay | |
---|---|
பிறப்பு | சுபாசிணி ஜெயரத்தினம் Shubashini Jeyaratnam 15 சூலை 1976 |
இறப்பு | 17 சூலை 2014 கிராபோவ், தோனெத்ஸ்க், உக்ரைன் | (அகவை 38)
இறப்பிற்கான காரணம் | விமான விபத்து |
தேசியம் | மலேசியர் |
பணி | நடிகை, தொழிலதிபர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–2014 |
பணி
தொகுஇலங்கை வம்சாவழிக் குடும்பம் ஒன்றில் மலேசியாவில் பிறந்த சுபாசிணி கோலாலம்பூரில் இருந்து வெளிவரும் நியூ ஸ்ட்ரெயிட் டைம்சு ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி ஒப்பீட்டுநராகப் பணியாற்றிய பின்னர், அப்பத்திரிகையின் விளம்பரப் பகுதியில் பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்ட்ரோ ரியா தொலைக்காட்சியில் தனது தந்தை ஜெயரத்தினத்துடன் இணைந்து மாரி மேனாரி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். 2011 இல் இவர் நடிக்க ஆரம்பித்தார். ஸ்பானார் ஜெயா, காடிசு 3, சுகமான சுமைகள் உட்படப் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.[1] அத்துடன் ரிலேசன்சிப் ஸ்டேட்டசு (2012), டோக்காக் (2013) ஆகிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.[2] ஆங்கிலம், மலாய், மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்றாகக் கதைக்கக் கூடியவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுவியட்நாமில் சுற்றுலா சென்ற போது இவர் நெதர்லாந்து நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.[3] திருமணத்திற்குப் பின் இவர் தாய்ப்பாலூட்டல், மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.[3]
இறப்பு
தொகுசுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா எயர்லைன்சு விமானம் 17 மூலமாக கோலாலம்பூர் வந்த போது, உக்ரைனிய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.[1][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Bello, Marisol; Ramakrishnan, Mahi (19 சூலை 2014). "Flight MH17 victims symbolize tragedy". USA Today. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
- ↑ Syarifah Rahman (19 சூலை 2014). "M'sian Actress, Dutch Hubby and Baby Perished With MH17". NTV7. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
- ↑ 3.0 3.1 Ramakrishnan, Mahi (20 சூலை 2014). "Malaysian family grieves for daughter and her family". USA Today. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.
- ↑ "Malaysian actress, Dutch hubby and baby die with MH17". MSN. Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.