சுப்பிரமணிய இராமச்சந்திர ஐயர்

சுப்பிரமணிய இராமசந்திர ஐயர் (S. Ramachandra Iyer)(பிறப்பு 1 அக்டோபர் 1901) என்பவர் இந்திய வழக்கறிஞர் மற்றும் தலைமை நீதிபதி ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக மே 10, 1961 முதல் நவம்பர் 1, 1964[1] பணியாற்றினார். 60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதைத் தவிர்ப்பதற்காக ஐயர் தனது பிறந்த தேதியைப் பொய்யாக்கினார் என்பதற்கான ஆதாரங்களைச் சென்னை வழக்கறிஞர் வசந்தா பாய் கண்டறிந்தார். வசந்தா பாய் நீதிபதியின் பிறந்த இடத்திற்குச் சென்று அவரது உண்மையான வயதைக் காட்டும் அவரது அசல் பிறப்புப் பதிவேட்டைப் புகைப்படம் எடுத்தது வந்தார். ஆனால் ஐயர் தனக்கு 60 வயது ஆகவில்லை என்று மறுத்தார். நீதிபதியின் இளைய சகோதரர் சுப்பிரமணிய பாலகிருஷ்ணன் தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாட அழைப்பிதழ்களை அனுப்பியதை அடுத்து, இவரது வயது 60 வயதுக்குக் குறைவாகக் காட்டப்பட்டு மீண்டும் பெரும் சர்ச்சையானது.[2] பாய் ஒரு மனுவைத் 1964ஆம் ஆண்டு நவம்பர் தாக்கல் செய்தார். அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி பி. பி. கஜேந்திரகட்கர்,[3][4] இந்த வழக்கு நீதித்துறையைக் கலங்கப்படுத்தும் என்று கூறியதால் ஐயர் நவம்பர் 1 1964 அன்று பதவி விலகினார். மேலும் இந்த மனு இறுதியில் 1967-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "The Honourable Chief Justices". Madras High Court. Archived from the original on 12 February 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
  2. "Timing of Katju's allegations needs to be questioned". Rediff. 23 July 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
  3. "Contempt Law and Human Rights". தி இந்து. 10 March 2001. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  4. "The controversy over age... then and now". தி இந்து. 29 January 2012. பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.