சுமித்ரா தேவி

இந்திய அரசியல்வாதி

சுமித்ரா தேவி (Sumitra Devi) பீகாரைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு ஜெகதீஷ்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி மூங்கர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி மரணமடைந்தார் .[1]. இவர் ஆர்க் சட்டமன்ற தொகுதியில் 1962ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை மற்றும் 1972ஆம் ஆண்டுமுதல் 1980ஆம் ஆண்டு வரை நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சுமித்ரா தேவி 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞானேஸ்வர பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மஞ்சுள்குமார் மற்றும் ராஜசேகர் என்ற என்ற இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரின் மாமியார் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Lok Sabha Speaker emphasizes on women education". The Times of India (in ஆங்கிலம்). September 27, 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்ரா_தேவி&oldid=3895265" இலிருந்து மீள்விக்கப்பட்டது