சுரீந்தர் குமார்

சுரீந்தர் குமார் (Surinder Kumar)(பிறப்பு 1982) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். குமார் சம்மு மாவட்டத்தில் பட்டியல் சாதி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட மார் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[1][2]

சுரீந்தர் குமார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்சுக் நந்தன் குமார்
தொகுதிமார்க்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

இளமையும் கல்வியும்

தொகு

குமார் சம்மு காசுமீரின் சம்மு மாவட்டத்தில் உள்ள மார்க் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தயால் சந்தின் மகன் ஆவார். 1999ஆம் ஆண்டில் கசன்சூவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வரை படித்துள்ளார்.[3]

அரசியல்

தொகு

குமார் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 42,563 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் முலா ராமை 23,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Marh, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Surinder Kumar with 42563 defeats INC's Mula Ram". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. "Marh Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  3. "Surinder Kumar(Bharatiya Janata Party(BJP)):Constituency- MARH (SC)(JAMMU) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரீந்தர்_குமார்&oldid=4120030" இலிருந்து மீள்விக்கப்பட்டது