சுருட்டுமடுப்பு
வடிவியல் மற்றும் பிரதேசவியல் கணிதவியலில், சுருட்டுமடுப்பு என்பது காகிதத் தாள் அல்லது இரு பரிமாண பன்மடங்கு தாள், சீரற்ற உருத்திாிபு பெற்று வெவ்வேறு அடர்த்தியுடைய முகடுகள் மற்றும் அம்சங்களுடன் முப்பரிமாண வடிவமைப்பை விளைவிக்கும். சுருட்டி கசக்கிய கட்டமைப்புகளுடைய வடிவியல் என்பது பரப்பியலில் ஆர்வமுடைய கணிதவியலாளரின் பாடமாகும்.[1] சுருட்டி கசக்கிய காகித பந்துகளை படிக்கும் பாேது அமுக்கு வலிமை இருக்கும் பாேது வியக்கத்தக்க சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகிறது. அவை மடிப்புகளிடையே உள்ள தட்டையான ப்ளாட்களின் உராய்வு இடைவினைகளின் மூலம் உருவானதாகும்.[2] அடர்த்தியாேடு தாெடர்புடைய மிகையான அமுக்கு வலிமை பொருட்கள் அறிவியல் மற்றும் இயந்திர பொறியியல் துறைகளில் சிறப்பு பாடமாகும்.
சுருட்டுமடுப்பின் முக்கியத்துவம்
தொகுசுருட்டு மடுப்பு மூலம் ஒரு தாளை பேக்கிங் செய்வது ஒரு சிக்கலான நிகழ்வு ஆகும். இது பொருள் அளவுருக்கள் மற்றும் பேக்கிங் நெறிமுறையை சார்ந்தது ஆகும். அப்படி தாளின் சுருட்டு மடுப்பு தன்மையானது, சுருள், காகிதம் மற்றும் பாலி-உறைகளின் தன்மையை பாெறுத்து மாறுபடுகிறது. இதை பொருளின் மடிப்பை அடிப்படையாகக் காெண்டு விளக்கலாம்.[3]
மேற்காேள்கள்
தொகு- ↑ Cerda, Enrique; Chaieb, Sahraoui; Melo, Francisco; Mahadevan, L (1999). "Conical dislocations in crumpling". nature 401. doi:10.1038/43395.
- ↑ Cambou, Anne Dominique; Narayanan, Menon (2011). "Three-dimensional structure of a sheet crumpled into a ball.". Proceedings of the National Academy of Sciences 108 (36): 14741–14745.
- ↑ Habibi, M; Bonn, D (2017). "Effect of the material properties on the crumpling of a thin sheet.". PrSoft matter 3: 4029.