சுரேசு குமார் மிசுரா

இந்தியக் கைப்பந்து வீரர்

சுரேசு குமார் மிசுரா (Suresh Kumar Mishra) இந்திய கைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஆவார். 1978 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்திய கைப்பந்து அணிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இராசத்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்திலுள்ள லட்சுமண்கார் நகரம் இவருடைய சொந்த ஊராகும். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் சொந்த ஊரில் இவர் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு இவருடைய சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசாங்கம் இவருக்கு அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்த்து[1]. இவ்விருதுக்குப் பின்னர் 1980 முதல் 1995 ஆம் ஆண்டு வரை அபுதாபி காவல்துறையின் கைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக இவர் பணிபுரிந்தார்.

சுரேசு குமார் மிசுரா
Suresh Kumar Mishra
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியன்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகைப்பந்து
அணிஇந்திய கைப்பந்து சங்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Arjuna Award Winners". Archived from the original on 2007-12-25. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசு_குமார்_மிசுரா&oldid=2719914" இலிருந்து மீள்விக்கப்பட்டது