சுரேந்திர குமார் யாதவ்

சுரேந்திர குமார் யாதவ் (Surendra Kumar Yadav) இந்திய மேனாள் நீதிபதியும் உத்தரப் பிரதேசத்தின் துணை லோகாயுக்தாவும் ஆவார். இவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்புக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிபதியாக இருந்தார்.[1] 1992 திசம்பர் 6 அன்று அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட தாக்கல் செயல்முறையின் கீழ் நடவடிக்கைகள் தொடர்ந்தன. சிறப்புக் குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த இவர், 2020 செப்டம்பர் 30 அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை வழங்கினார்.[2][3][4]

வாழ்க்கை

தொகு

யாதவ் செப்டம்பர் 10,1959 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரின் பகத்பூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ராம் கிருஷ்ண யாதவ். சட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, 1990ஆம் ஆண்டில் உயர் நீதித்துறை சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் முன்சிப், குற்றவியல் நீதித்துறை நடுவர், மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய இவர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு குற்றப்புலாய்வுத் துறை நீதிபதியாகவும் இருந்தார். 2020ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்ற பிறகு உத்தரப் பிரதேசத்தின் துணை லோக்காயுக்தாவாக நியமிக்கப்பட்டார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Babri demolition verdict: कौन हैं वे जज जिन्होंने सुनाया बाबरी मस्जिद पर ऐतिहासिक फैसला". News18 हिंदी (in இந்தி). 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  2. "Babri demolition case judge's wait for promotion finally ends". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  3. "Babri Masjid trial has stalled my promotion: Sessions Judge to Supreme Court". The Indian Express (in ஆங்கிலம்). 2018-09-11. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  4. "सुरेंद्र कुमार यादव: बाबरी पर फ़ैसले से यूपी के उप लोकायुक्त तक". BBC News हिंदी (in இந்தி). 2021-04-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  5. "Judge Surendra Kumar Yadav who gave Babri case verdict is appointed Up-Lokayukta". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
  6. "जानिए कौन हैं जस्टिस सुरेंद्र यादव जिनकी कलम से लिखा जाएगा ऐतिहासिक फैसला". ETV Bharat News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_குமார்_யாதவ்&oldid=4070646" இலிருந்து மீள்விக்கப்பட்டது