சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இயற்பெயர் என். ஆர். சுரேஷ்குமார். பிறந்த ஊர் இராமேஸ்வரம். பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரைக்கு குடிபெயர்ந்தார். பியூசியை மதுரை நாகமலையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் படித்தார். இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பு மஜுரா கல்லூரியில். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம். 1979 முதல் எழுதி வருகிறார். தமிழக அரசில் சிராசுதாராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
நூல்கள்
தொகு- அலையும் சிறகுகள் (1982)
- மறைந்து திரியும் கிழவன் (1993)
- மாபெரும் சூதாட்டம் (2005)
- அவரவர் வழி (2009)
- நானும் ஒருவன் (2012)
- நடன மங்கை (2013)
- நள்ளிரவில் சூரியன் (2014)
- பின்நவீனத்துவவாதியின் மனைவி (2017)
- கடலும் வண்ணத்துப்பூச்சியும் - நாவல் (2018)
- அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் - நாவல் (2019)
- பின்னணிப் பாடகர் (2020)
விருது
தொகு- விஷ்ணுபுரம் விருது - 2020[1]
- மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2023)