சுர்சாகி திருவிழா

சுர்சாகி திருவிழா (Surjahi Puja) இந்திய நாட்டின் சார்க்கண்டு மாநிலத்தில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த விழாவில் மக்கள் சூரியனை வணங்குகிறார்கள். இவ்விழா ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை கொண்டாடப்படும் திருவிழாவாகும். இவ்விழா சார்க்கண்டு சதன் மக்களால் கொண்டாடப்படுகிறது.[1]

சுர்சாகி திருவிழா
கடைபிடிப்போர்சதன் மக்கள்
வகைபிராந்திய திருவிழா
முக்கியத்துவம்சூரியனை வணங்குதல்
அனுசரிப்புகள்சார்க்கண்டு
நாள்மார்கழி (நவம்பர்/டிசம்பர்) அல்லது மாசி (ஜனவரி/பிப்ரவரி) முதல் மூன்று நாள்
நிகழ்வு5 ஆண்டுகள்

சொற்பிறப்பியல் தொகு

சுர்சாகி என்பது சூரஜ் என்பதன் கூட்டு வார்த்தையாகும். அதாவது சுர்சா என்றால் சூரியன் மற்றும் அஹி என்றால் இஸ் என பொருள்படும். இவ்விழா சூரியனை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது.[1]

கொண்டாட்டம் தொகு

இத்திருவிழாவில் மக்கள் சூரியனை வணங்குகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா கொண்டாடப்படுகிறது.[2] இவ்விழா மார்கழி அல்லது மாசி மாதத்தில் முதல் மூன்று நாட்களில் அனுசரிக்கப்படுகிறது. ஆசை நிறைவேறும் போது கொண்டாடப்படுகிறது. இது வீட்டின் முற்றத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், முழு குடும்பமும் அல்லது கிராம மக்களும் பங்கேற்கிறார்கள். முதல் நாள் குளியல், இரண்டாம் நாள் விரதம், மூன்றாம் நாள் யாகம் நடக்கிறது. மக்கள் ஆடுகளை பலியிட்டு சூரியனுக்கு தபன் என்கிற மதுபானம் வழங்குகிறார்கள்.[3] பின்னர் அவர்கள் விருந்து உண்கிறார்கள். இவ்விழா சார்க்கண்டின் சதன் மக்களால் கொண்டாடப்படுகிறது.[1][4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "प्राकृतिक शक्ति सूर्य:झारखंड की अपनी परंपरा में छठ जैसा पर्व नहीं है, यहां सूरज की पूजा का त्योहार है सूरजाही". bhaskar. 2020. https://www.bhaskar.com/amp/local/jharkhand/news/in-its-tradition-of-jharkhand-there-is-no-festival-like-chhath-here-is-the-festival-of-sun-worship-127928494.html. 
  2. "इचाकडीह में सुरजाही पूजा का आयोजन". livehindustan. 18 April 2022. https://www.livehindustan.com/jharkhand/ramgarh/story-surjahi-puja-organized-in-ichakdih-6289730.html. 
  3. Manish Ranjan (2022). JHARKHAND GENERAL KNOWLEDGE 2021. Prabhat Prakashan. p. 3.25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789354883002.
  4. Lalan Tiwari (1995). Issues in Indian Politics. Mittal Publications. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170996187.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்சாகி_திருவிழா&oldid=3655454" இலிருந்து மீள்விக்கப்பட்டது