சுற்றுக் கோளாறு

மனச்சோர்வின் வீரியம் குன்றிய நிலை மகிழ்வின்றிய கோளாறு எனப்படுவது போல, இருதுருவக்கோளாறின் வீரியம் குன்றிய நிலை சுற்றுக் கோளாறு (Cyclothmic Disorder) எனப்படும். இங்கு உற்சாகமான நிலையும் சோர்வு நிலையும் சாதாரணத்தை விட மேலோங்கி காணப்படும்.

சேர்ந்த நிலையில் இவர்கள் ஒதுங்கி இருப்பர். தம்மால் எதவும் இயலாது என உணர்வார்கள். சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது இருக்கும். தம்மைச்சுற்றி நடைபெறும் விடயங்களில் அக்கறையின்றி காணப்படுவர். அதீதமாய் நித்திரை கொள்வர். விடயத்தை கிரகித்துக் கொள்வது கடினமாய் இருக்கும். வேலையில் ஈடுபடுவதும் குறைவாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுக்_கோளாறு&oldid=1114495" இலிருந்து மீள்விக்கப்பட்டது