சுழல் அச்சு இயந்திரம்
சுழல் அச்சு எந்திரம் (Rotary) என்பது அச்சுத்தொழிலில் பயன்படும் ஓர் எந்திரமாகும். இவ்வகை அச்சு எந்திரத்தில் பெரும்பாலும் பத்திரிக்கைகளே அச்சிடப்படுகின்றன. இதில் முடுக்கப்பட்ட அச்செழுத்துத் தட்டுகள் சமதள வடிவில் இல்லாது உருளை வடிவில் இருக்கும் . இரு எழுத்து உருளைகளுக்கு இடையே செல்லும் தாளில் இருபுறமும் ஒரே சமயத்தில் அச்சாகும். அச்சிட வேண்டிய தாளும் பெரும் உருளையொன்றில் சுற்றப்பட்டிருக்கும். உருளைகள் விரைந்து சுழல்வதால் வேகமாக அச்சிடலாம். மணிக்கு நாற்பதாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட இயலும். அச்சாகும் தாள்களை வேண்டிய அளவில் தானே வெட்டி மடித்து வெளியே அனுப்பிவிடும் எந்திரங்களும் உள்ளன.[1]
படிமங்கள்
தொகு-
சுழல் அச்சு எந்திரம்
-
1883-ல் சுழல் அச்சு எந்திரம்
-
1883-ல்