சுவப்னா (Swapna) ஒரு திருநங்கை ஆவார். மதுரையைச் சேர்ந்த இவர், சட்டப்போராட்டங்கள் நடத்தி இந்தியாவிலேயே அரசுத் தேர்வாணையத்தில் தேர்வெழுதிய முதல் திருநங்கையாவார்.

சுவப்னா
பிறப்புமதுரை
சூலை 3, 1990 (1990-07-03) (அகவை 34)
மதுரை
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சுவப்னா
கல்விஇளங்கலைப் பட்டம் (தமிழ்)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1990 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை மதுரை மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளியில் பயின்று தமிழ் மொழிப்பாடத்தில் பள்ளி முதலிடம் பிடித்தார். பின் திருமங்கலம் பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினிப் பயன்பாட்டுத் (பி.சி.ஏ) துறை தேர்ந்தெடுத்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில் தன்னை திருநங்கையாய் உணர்ந்த பின் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் [1]. பின் சிறுது காலம் திருநங்கை மக்களின் கஷ்டத்தையும் வாழ்க்கை போராட்டங்களையும் கண்டு மன வேதனை அடைந்து இந்நிலை மாற அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு தமிழ் மொழியில் பட்டம் பெற்றார்.

அரசுத் தேர்வாணையத்தின் முதல் திருநங்கை

தொகு

ஐ.ஏ.எஸ் கனவு கொண்ட சுவப்னா[2], 2012ம் ஆண்டு தேர்வாணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கைகள் தேர்வாணையத்தில் பங்கேற்கமுடியாதென்பதால் நிராகரிக்கப்பட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நண்பர்கள் & தோழிகளோடு உதவியோடு போராட்டங்கள் நடத்தியதால் பலனளிக்காததால்[3], தன்னை பெண் பாலினத்தில் தேர்வெழுத அனுமதிக்கும்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் வென்று, 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தில் குரூப்2 தேர்வெழுதி, இந்தியாவில் அரசுத் தேர்வாணையத்தில் தேர்வெழுதிய முதல் திருநங்கையானார்[4][5]. தேர்வில் மாநில அளவில் 334ம் இடம் பிடித்தார்.[6] மேலும் 2014 ம் ஆண்டில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, டிஎன்பிஎஸ்சிக்கு சென்றார், அங்கு அவரின் சான்றிதழிலில் ஆண் பெயர் இருந்தால் இந்த சான்றிதழ் தவறாக உள்ளது என நிராகரிக்கப்பட்டார். இந்த நிலைவேறு எந்த திருநங்கைகளுக்கும் வர கூடாது என்று எண்ணி, பள்ளிக்கல்வித்துறையில் மனு அளித்தார், அங்கு பத்தாம் வகுப்பு சான்றிதழ் மாற்றி தர இயலாது என்ற பதில் வந்ததை தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றகிளையில் வழக்குத்தொடுத்து அதில் வெற்றி அடைந்து, பள்ளி சான்றிதழைகளை பெண் என்ற அடையளதோடு மாற்றி, அரசுத்தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

2016 ம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத்தேர்வு எழுதினார், இந்திய அளவில் குரூப் 1 முதன்மைத்தேர்வு எழுதியவர்கள் சுவப்னாவை தவிர யாருமிலர் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவப்னா&oldid=3245615" இலிருந்து மீள்விக்கப்பட்டது