சுவரன் லதா (பாடகர்)

பஞ்சாபி நாட்டுப்புற பாடகர்

சுவரன் லதா (Swaranlata ) (பிறந்தது:1938 நவம்பர் 19) இவர் இந்திய பஞ்சாபின் இலைலா மாவட்டத்திலுள்ள ஜார்கன் வாலா என்ற இடத்தில் பிறந்த முன்னாள் பஞ்சாபி பாடகர் ஆவார். [1] [2] இவர் நாட்டுப்புறம் மற்றும் இணைப் பாடலகளை பாடினார். லாய் டி மேய் காலியன் பாகன் டி மெஹந்தி, முன் விச் பாபி தே, நந்த் புர்கியன் பேவ் போன்ற பாடல்களுக்காக இவர் அறியப்படுகிறார். [3] கர்னைல் கில், [4] முகமது சாதிக், திதார் சந்து, குர்ச்சரன் பொஹ்லி, ரமேஷ் ரங்கீலா, ஜகத் சிங் ஜாகா, தலீப் சிங் தீப் [5] மற்றும் மகேந்திர கபூர் உள்ளிட்ட அவரது காலத்தின் ஒவ்வொரு பஞ்சாபி பாடகருடனும் இவர் பாடியுள்ளார். இவரது பெரும்பாலான பதிவுகள் கரம்ஜித் துரியுடன் காணப்படுகின்றன. இவருடன் அவர் நீண்ட காலம் நேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாபின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இவர் 1988 இல் நேரடி நிகழ்ச்சிகளை செய்வதை நிறுத்திக் கொண்டார்.[1] இவரது கடைசி நிகழ்ச்சி தில்வான் என்ற இடத்தில் இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "'ਨੀਂ ਲੈ ਦੇ ਮਾਏ ਕਾਲਿਆਂ ਬਾਗਾਂ ਦੀ ਮਹਿੰਦੀ' ਵਾਲੀ ਸਵਰਨ ਲਤਾ". Archived from the original on 4 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
  2. "Swaran Lata". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
  3. "Thamle De Kol Kol Di (Karamjit Dhuri & Swaran Lata) Old Punjabi Duet". யூடியூப். 13 March 2011. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
  4. "Rakheya Deyor Kuwara (Karnail Gill & Swaran Lata) Old Punjabi Duet". YouTube. 20 September 2013. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
  5. "Kurti Mal Mal Di (Daleep Singh Deep & Swaran Lata)". YouTube. 24 September 2013. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரன்_லதா_(பாடகர்)&oldid=3750619" இலிருந்து மீள்விக்கப்பட்டது