சுவரெலும்பு
சுவரெலும்பு (Parietal bone) மனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும் மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும். இது வலது, இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், நான்கு கோணங்கள் கொண்டது.
எலும்பு: சுவரெலும்பு | |
---|---|
இடது சுவரெலும்பு. வெளி மேற்பரப்பு. | |
இடது சுவரெலும்பு. உள் மேற்பரப்பு. | |
இலத்தீன் | os parietale |
Gray's | subject #32 133 |
Articulations | MeshName = Parietal+Bone |
மேற்பரப்புக்கள்
தொகுவெளி மேற்பரப்பு
தொகுவெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டு வளைந்த வரிகள் காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal fascia), கீழ் கடைநுதல்வரியில் பொட்டுத்தசையின் மேற்பாகமும் (temporal muscle) தொடுக்கப்படுகிறது. மேற் கடைநுதல்வரியின் மேலே புறப்பக்க மேடு (parietal eminence) என அழைக்கப்படும் ஒரு உயர்வு காணப்படும். மேற் கடைநுதல்வரியின் மேலே உள்ள அனைத்துப்பகுதிகளும் மேல் மண்டையோட்டுத் தசைநாண்படலத்தால் (epicranial aponeurosis) மூடப்பட்டிருக்கும். வரிகளின் கீழே உள்ள பகுதி பொட்டுக் குழிவின் (temporal fossa) ஒரு பகுதியை ஆக்குகிறது, இங்கே பொட்டுத்தசை இணைக்கப்படுகிறது.
பின்புறப் பகுதியில் எலும்பின் மேல் வகிட்டு ஓரத்தின் அருகே புறப்பக்கத் துவாரம் (parietal foramen) காணப்படுகிறது, இது மேல் வகிட்டுக் காற்றுக்குடாவுடன் (superior sagittal sinus) இணையும் தமனியையும் சிலவேளைகளில் பிடரி நாடியின் சிறிய பிரிவையும் தன்னூடே புகவிடுகிறது.
உள் மேற்பரப்பு
தொகுஉள்மேற்பரப்பு குழிவானது, இங்கு காணப்படும் சிறு மடிப்புக்களும் பள்ளங்களும் மூளையின் மடிப்புகளுக்குரியதாக விளங்குகிறது, மேலும் எண்ணிக்கையில் கூடியளவில் மிகச்சிறிய சுவடுகள் நடு மூளையமென்சவ்வுக் குருதிக்குழாய்களின் சிறிய கிளைகளுக்குரியதாகும், இவை ஆப்புருக் கோணத்தில் (sphenoidal angle) இருந்து மேல் நோக்கியும் பின் நோக்கியும் செல்கின்றன, மேலும் செதிலுரு ஓரத்தின் மைய மற்றும் பிற்புறப் பகுதிகளில் இருந்தும் செல்கின்றன.
மேல் ஓரத்தில் காணப்படும் வரிப்பள்ளம் எதிர்ப்பக்க சுவரெலும்புடன் சேர்ந்து உச்சி வகிட்டுக்குழியை (sagittal sulcus) ஆக்குகிறது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளைய வளைமடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது.
ஓரங்கள்
தொகு- மேல்வகிட்டு ஓரம் , இங்கு இரு சுவர் எலும்புகளும் பல்வடிவப் பிணைப்புகள் மூலம் இணைக்கப்படுவதன் மூலம் வகிட்டுப் பிணைப்பு (sagittal suture) உருவாகிறது.
- செதிலுரு ஓரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது,
- முற்பக்கம் : மெல்லியது, கூரானது, வெளிப்புறமாக சரிவான விளிம்பைக் கொண்டது; ஆப்புரு எலும்பின் பெருஞ் சிறகின் நுனியுடன் ஒன்றன் மேல் ஒன்றாகிக் காணப்படுகிறது.
- நடுப்பக்கம்: வளைவானது, வெளிப்புறமாக சரிவான விளிம்பைக் கொண்டது; கடைநுதல் எலும்பின் செதிலுருப் பகுதியுடன் ஒன்றன் மேல் ஒன்றாகிக் காணப்படுகிறது.
- பிற்பக்கம்: தடித்தது, கருக்கானது, கடைநுதல் எலும்பின் முலையுருப் பகுதியுடன் மூட்டப்படுகிறது.
- முன்புற ஓரம் ஆழ்ந்த கருக்கான தோற்றமளிக்கும், நுதல் எலும்புடன் பொருத்தப்படுவதன் மூலம் அரைப்பகுதி இடவலப் பிணைப்பை (Coronal suture) உருவாக்குகிறது. இடவலப் பிணைப்புடன் வகிட்டுப்பிணைப்பு சேரும் பகுதி ஆங்கில எழுத்து ‘T’ வடிவ தோற்றம் கொண்டிருக்கும், இது முன்னுச்சி (bregma) என அழைக்கப்படும்.
- பிடரி ஓரம் நீண்ட பல் போன்ற தோற்றமுடைய விளிம்புகளைக் கொண்டது, பிடரெலும்புடன் மூட்டப்படுவதன் மூலம் ஒரு பகுதி கவைப்பிணைப்பை (lambdoid suture) உருவாக்குகிறது, கவைப்பிணைப்பும் வகிட்டுப்பிணைப்பும் சேரும் பகுதி கிரேக்க எழுத்து “λ” (இலம்டா) போன்ற தோற்றமுடையதால் இலம்டா என்று அழைக்கப்படும்.
கோணங்கள்
தொகுநான்கு கோணங்கள்: முன்கோணம், ஆப்புருகோணம், பிடரிக்கோணம், முலையுருக் கோணம்