சுவஸ்திக் கிணறு

சுவஸ்திக் கிணறு (சுவஸ்திக் குளம்) [1] கிபி எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. சுவசுத்திக்கா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் இறப்பிலா வாழ்க்கையைப் பற்றிய பாடல் வரிகள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்த கிணற்றை "மற்பிடுகு பெருங்கிணறு" என்றும் கூறுகின்றனர்.

சுவஸ்திக் வடிவில் அமைந்துள்ளதால் இதில் ஒரு துறையில் நீராடுபவர்கள் அடுத்த துறையில் இருப்போரைக் காண முடியாத சிறப்பான அமைப்பாக உள்ளது.[1]

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைகள்தொகு

  • தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவஸ்திக்_கிணறு&oldid=1719447" இருந்து மீள்விக்கப்பட்டது