சுவாமி
இந்து தொன்மவியலில், சுவாமி அல்லது ஸ்வாமி (சமக்கிருதம்: स्वामी svāmī [sʋaːmiː]) சமஸ்கிருதச் சொல்லுக்கு தலைவர், இறைவன் என்றும் பொருள்.[1] உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'சுவாமி'.
பிரபஞ்சம் மற்றும் அனைத்து சீவராசிகளும் சுவாமியின் படைப்பு என்பதால் அனைத்து படைப்புகளுக்கு சுவாமியே உடையவர் ஆகிறார். கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களில், 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுரமுடையார்', 'கபாலீஷ்வரமுடையார்', என 'உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
குருவும் சுவாமியும் ஒன்று என்பதால்தான் வைணவர்கள் ஸ்ரீஇராமாநுஜரை 'உடையவர்' என்றழைக்கிறார்கள்.[2] 'எல்லாம் உன் உடமையே' என்று தாயுமானவரும் கடவுளைப் பாடியுள்ளார்.