சுவாமிநாதன் ஜானகிராமன்
சுவாமிநாதன் ஜானகிராமன் (Swaminathan Janakiraman) ஓர் இந்திய வங்கியாளர் ஆவார், இவர் ஜனவரி 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜூன் 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை பாரத மாநில வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார் [1]
சுவாமிநாதன் ஜானகிராமன் Swaminathan Janakiraman | |
---|---|
64 ஆவது இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் | |
முன்னையவர் | மகேசு குமார் செயின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
20 ஜூன் 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். [2] [3]
ஆரம்ப காலம்
தொகுதனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தின் கும்பகோணத்தில் நகர மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், 1984 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அரசுக் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். [4]
வங்கி தொழில்
தொகு1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரத மாநில வங்கியில் மேலாளராகப் பணியில் சேர்ந்தார் [5]
பாரத மாநில வங்கியில் 34 ஆண்டுகள் பணியாற்றி, நிர்வாக இயக்குனராக உயர்ந்தார். [6]
ஈடுபாடுகள்
தொகுபாரத மாநில வங்கியின் நிதிச் செயல்பாடு, நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திறன் கண்காணிப்பு, மூலதன திட்டமிடல் மற்றும் முதலீட்டாளர் உறவுகளை மேற்பார்வையிடுதல் போன்ற செயல்பாடுகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். கூடுதலாக, இவர் இலக்கமுறை வங்கி திட்டத்தின் தலைவராக வங்கியின் இலக்கமுறைமாற்றப் பயணத்திலும் ஈடுபட்டுள்ளார். [7]