சுவாமி சகஜானந்த் சரஸ்வதி விரிவாக்க விஞ்ஞானி/ தொழிலாளி விருது

சுவாமி சகஜானந்த் சரஸ்வதி விரிவாக்க விஞ்ஞானி/ தொழிலாளி விருது (Swamy Sahajanand Saraswati Extension Scientist/ Worker Award) என்பது சுவாமி சகஜானந்த் சரசுவதியின் நினைவாக இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தினால் நிறுவப்பட்ட விருதாகும்.[1] 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது, விவசாயக் கல்வி ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.[1]

2003-2004ஆம் ஆண்டுக்கான சுவாமி சகஜானந்த் சரஸ்வதி விரிவாக்க விஞ்ஞானி/தொழிலாளர் விருது பீகார், பெகுசெராய், வேளாண் விரிவாக்க மையத்தினைச் சேர்ந்த ரவீந்திர குமார் சோஹானேவுக்கு வழங்கப்பட்டது; வேளாண் விரிவாக்க மையம், எஸ்சி பிரமாணிக், மத்திய பறவைகள் ஆராய்ச்சி நிலையம், போர்ட் பிளேயர்; மற்று பி. அனிதா குமாரி வள மேலாண்மை விரிவாக்கப் பணிக்காக வழங்கப்பட்டது.[2]

2007ஆம் ஆண்டில், பயிர் உற்பத்திக்காக இரண்டு விஞ்ஞானிகளுக்கும், கால்நடை உற்பத்தி, வள மேலாண்மை மற்றும் வீட்டு அறிவியலுக்கு தலா ஒருவருக்கும் சுவாமி சகஜானந்த் சரஸ்வதி விரிவாக்க விஞ்ஞானி பணியாளர் விருது வழங்கப்பட்டது.[3]

விருது தொகு

விருதாளருக்கு 25,000 ரூபாய் மதிப்பிலான நான்கு விருதுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சான்றிதழ் மற்றும் தகட்டுடன் வழங்கப்படுகின்றன.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "ICAR Awards". Indian Council of Agricultural Research இம் மூலத்தில் இருந்து 2008-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080603012010/http://www.icar.org.in/merits.html. பார்த்த நாள்: 2008-09-03. 
  2. "Women bag a quarter of ICAR awards". தி இந்து. 2005-07-17 இம் மூலத்தில் இருந்து 2007-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070811051159/http://www.hindu.com/2005/07/17/stories/2005071701361200.htm. பார்த்த நாள்: 2009-02-23. 
  3. "Pawar to give ICAR Awards". The Tribune. 2007-07-15. http://www.tribuneindia.com/2007/20070716/nation.htm. பார்த்த நாள்: 2009-02-23.