சுவாமி சாரதானந்தர்

சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சரத் சந்திர சக்கரவர்த்தி.இவரது பெற்றோர் கிரிஷ் சந்திர சக்கரவர்த்தி, நீலமணி தேவி.சசியும் சரத்தும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். பிரம்ம சமாஜத்தின் கேசவ சந்திர சேன் எழுதிய கட்டுரை மூலம் கேள்விப்பட்டு இவர்களது பொதுவான நண்பர் காளி பிரசாத் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்க விரும்ப, அவருடன் சசியும் சரத்தும் இணைந்து சென்று ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தனர்.[1]

சுவாமி சாரதானந்தர்
சுவாமி சாரதானந்தர்
பிறப்பு1865 டிசம்பர் 23
இறப்பு1927 ஆகஸ்டு 19
இயற்பெயர்சரத் சந்திர சக்கரவர்த்தி
குருஸ்ரீராமகிருஷ்ணர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தர் இவரை சேவை செய்யத் தேர்ந்தெடுத்தார். அன்னை சாரதா தேவியின் சேவைகளை அவரது சமாளிக்கச் சிரமமான உறவினர்கள் மத்தியில் திறம்படச் செய்தவர்.

இவர் தமது குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை, இளமைப்பருவத்தில் அவருடன் வாழ்ந்த பலரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டி ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 317-383

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_சாரதானந்தர்&oldid=2950956" இருந்து மீள்விக்கப்பட்டது