தயானந்த சரசுவதி
தயானந்த சரசுவதி சுவாமிகள் (12 பெப்ரவரி 1824 – 30 அக்டோபர் 1883) தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.[2]
தயானந்த சரசுவதி சுவாமிகள் | |
---|---|
பிறப்பு | 12 பெப்ரவரி 1824 குஜராத் |
இறப்பு | 30 அக்டோபர் 1883[1] அஜ்மீர், ராஜஸ்தான் |
இயற்பெயர் | மூல்சங்கர் |
தேசியம் | இந்தியா |
குரு | விரஜானந்த தண்டி (தண்டி சுவாமி பூர்ணானந்த்) |
வரலாறு
தொகுஇளமை
தொகுகுஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று பிறந்த இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும் அளிக்கப்படவில்லை. இவருக்கு வீட்டில் வைத்து சமஸ்க்ருதம், மதக் கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தண்டி சுவாமி பூர்ணானந்த் என்பவரிடமிருந்து கமண்டலம் மற்றும் தண்டம் பெற்றுத் துறவியாக மாறினார். அன்றிலிருந்து தயானந்த சரசுவதி என அழைக்கப் பெற்றார்.
யோகா மற்றும் தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த இவர் 1837 ஆம் ஆண்டில் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீதான நம்பிக்கையை இழந்தார். வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பினார். அதன் பின்பு சமயத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள், மோசடிகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். இந்து, கிறித்தவ, இசுலாமிய சமய சாத்திர அறிஞர்களிடம் தர்க்கம் (சொற்போர்/விவாதம்) செய்து பல கருத்துகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வுகள் அனைத்திலும் இவர் வெற்றியடைந்தார்.
ஆர்ய சமாஜம்
தொகு1875 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாளில் மும்பையில் ஆரிய சமாஜம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இவர் காலத்தில் நிகழ்ந்து வந்த சிறுவயதுத் திருமண முறைகளுக்கு (குழந்தை திருமணம்) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடு முழுவதும் பரப்பப் பாடுபட்ட இவர் எழுதிய “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” எனும் புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இவர் சமையல்காரர் விசம் கலந்த பாலைப் பருகக் கொடுத்ததை அறிந்து அவனை மன்னித்து அவன் சொந்த ஊருக்குச் செல்ல பயணப்பணமும் அளித்து உதவினார். இவரது 59 வது வயதில் 1883 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று மரணமடைந்தார்.