திரிகுணாதீதானந்தர்

(சுவாமி திரிகுணாதீதானந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாமி திரிகுணாதீதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது இயற்பெயர் சாரதா பிரசன்ன மித்ரா.இவரது தந்தை சிவகிருஷ்ண மித்ரா.இவரது ஆசிரியர் அமுதமொழிகள் நூலை உலகிற்குத் தந்த ராமகிருஷ்ண பக்தர் ’ம’.அவர் சாரதாவை ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க 1884 டிசம்பர் 27 ஆம் தேதி அழைத்துச் சென்றார்.

சுவாமி திரிகுணாதீதானந்தர்
சுவாமி திரிகுணாதீதானந்தர்
பிறப்பு1865 ஜனவரி 30
கல்கத்தாவின் நௌரா கிராமம்
இறப்பு1915 ஜனவரி 10
அமெரிக்கா
இயற்பெயர்சாரதா பிரசன்ன மித்ரா
குருஸ்ரீராமகிருஷ்ணர்
மேற்கோள்"கடினமாக உழை; உன்னை நெறிப்படுத்திக்கொள்; குணசாலியாக மாறு; நிலைதடுமாறாதே; உண்மைப்பரம்பொருள் உனக்குள் ஒளிர்கிறது, உணர்;சுதந்திரனாகு."

அமெரிக்காவில் வேதாந்தப் பணிகளை மேற்கொண்ட சுவாமி துரியானந்தரின் உடல்நிலைக் குறைவால்,இவர் சுவாமி விவேகானந்தரால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் செய்த இவர்,மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தமது முன்னாள் மாணவனின் வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்து பின்னர் இறந்தார். காயமடைந்த சுவாமி திரிகுணாதீதானந்தரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் போது மரணவேதனையிலும்,வெடிகுண்டு வீசி அதற்குத் தானும் பலியான தமது முன்னாள் மாணவனான லூயிஸ்க்காக கலங்கி"லூயிஸ் எங்கே! அவன் ஓர் அப்பாவி" என்று கூறிக்கொண்டே சென்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 535-581
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகுணாதீதானந்தர்&oldid=2718468" இலிருந்து மீள்விக்கப்பட்டது