சுவாமி விசுதானந்தா

இந்திய ஆன்மீகத் தலைவர்

சுவாமி விசுதானந்தா (Swami Vishudhananda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவராவார். இவர் 1950 ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் நகராட்சியில் பிறந்தார். சிறீ நாராயண தர்ம சங்கத்தின் தலைவராக 2016 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டு அப்போது முதல் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1]

சுவாமி விசுதானந்தா
Swami Vishudhananda
பிறப்பு1950 (அகவை 70–71)
செங்கன்னூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஆன்மீகத் தலைவர்
அறியப்படுவதுசிறீ நாராயண தர்ம சங்கத்தின் தலைவர்
விருதுகள்பத்மசிறீ, 2019[1]

சிறீ நாராயண குரு தியானம் செய்த சிவகிரியில் மருந்துவாழ் மலையை பாதுகாப்பதில் இவர் குறிப்பிடத்தக்கவராவார். [2] 1982 ஆம் ஆண்டில் இவர் சிறீ நாராயண தர்ம சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில், சிறீ நாராயண குருவின் வாழ்க்கை மற்றும் பார்வை குறித்த ஆய்வுகளுக்காக ஒரு தன்னாட்சி பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கினார். [2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_விசுதானந்தா&oldid=3158335" இருந்து மீள்விக்கப்பட்டது