சுவாலைப் பரிசோதனை

ஒரு மாதிரிப் பொருளிலுள்ள மூலகங்களை அல்லது உலோக அயன்களைக் கண்டறிவதற்கான ஒரு இரசாயனப் பரிசோதனையே சுவாலைப் பரிசோதனை எனப்படும். இதன் போது மூலகம் அல்லது சேர்வையின் சிறிதளவு மாதிரி அதிக வெப்பமுடைய நீலச் சுவாலைக்கு மேல் பிடிக்கப்படும். இதன் போது மாதிரியிலுள்ள மூலகத்துக்குரிய தனித்துவமான நிறம் கிடைக்கும். இது பொதுவாக உலோகங்களுக்கு நன்றாக வேலை செய்யும். பொதுவாக சுவாலைப் பரிசோதனையின் போது ஆய்வுகூடங்களில் பன்சன் சுடரடுப்பு பயன்படுத்தப்படும்.[1] மூலகத்தின் சுவாலைப் பரிசோதனையின் போது பெறப்படும் ஒளியைக் கோணலாக்கிப் பெறப்படும் நிறமாலை அம்மூலகத்தின் காலல் நிறமாலையை ஒத்திருக்கும். சுவாலைப் பரிசோதனையின் போது அணுக்கள் தனித்தனியாக்கப்பட்டு அருட்டப்படுகின்றன. அணுக்களிலுள்ள இலத்திரன்கள் சக்தியை உள்வாங்கி உயர்சக்திப் படிக்குச் சென்று மீண்டும் தாழ் சக்திப் படிக்குச் செல்லும் போது குறித்த அதிர்வெண்ணுடைய மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன. இவற்றில் கட்புலனுக்குரியவை நிறங்களாக எம் கண்களுக்குத் தென்படுகின்றன. இதன் போது வெளிவரும் ஒளியின் அதிர்வெண்கள் ஒவ்வொரு மூலகத்துக்கும் தனித்துவமானவையாக உள்ளன. எனவே வெளிவரும் ஒளியின் நிறத்தைக் கொண்டு மூலகத்தைக் கண்டறிய முடியும். சுவாலைப் பரிசோதனையின் போது வெளியிடப்படும் நிறம் சிவப்பெனில் சக்தி மாற்றம் குறைவாகும், ஊதா நிறமெனில் சக்தி மாற்றம் அதிகமாகும்.[2]

செப்பு ஹேலைட்டுக்கான சுவாலைப் பரிசோதனை.

சில மூலகங்களின், அயன்களின் சுவாலைப் பரிசோதனை நிறங்கள்

தொகு
குறியீடு மூலகம் சுவாலை நிறம் புகைப்படம்
As ஆர்செனிக் நீலம்  
B போரான் பிரகாசமான பச்சை நிறம்  
Ba பேரியம் வெளிர் பச்சை நிறம்
Ca கல்சியம் செங்கட்டிச் சிவப்பு  
Cs சீசியம் நீல-ஊதா நிறம்
Cu(I) செம்பு(I) (Cu+) நீலப்பச்சை நிறம்
Cu(II) செம்பு(II) (சேர்வையில் ஹேலைட்டு இல்லாத போது) Green  
Cu(II) செம்பு(II) (ஹேலைடு) (Cu2+) நீலப் பச்சை
Fe இரும்பு தங்க நிறம்
In இன்டியம் நீலம்
K பொட்டாசியம் வெளிர் ஊதா  
Li இலித்தியம் சிவப்பு  
Mn (II) மங்கனீசு (II) மஞ்சட்பச்சை
Mo மொலிப்டினம் மஞ்சட்பச்சை
Na சோடியம் மஞ்சள்  
P பொசுபரசு வெளிர் நீலப்பச்சை நிறம்
Pb ஈயம் வெளிர் நீலம்/ வெள்ளை  
Ra ரேடியம் சிவப்பு
Rb ருபிடியம் ஊதாச் சிவப்பு நிறம்  
Sb அந்திமனி வெளிர் பச்சை  
Se செலனியம் நீலம்
Sr ஸ்ரோன்டியம் செந்நிறம்  
Te டெலூரியம் வெளிர் பச்சை
Tl தால்லியம் பச்சை
Zn துத்த நாகம் நிறமற்றது/ வெளிர் நீலப்பச்சை  

மேற்கோள்கள்

தொகு
  1. Jim Clark (2005). "Flame Tests". Chemguide.
  2. "Atomic Absorption (AA)". Perkin Elmer. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலைப்_பரிசோதனை&oldid=2746394" இலிருந்து மீள்விக்கப்பட்டது