சுவிக்கர் வினைப்பொருள்

சுவிக்கர் வினைப்பொருள் (Zwikker reagent) எளிய உடனடி சோதனையில் பார்பிட்யுரேட்டுகளை ஊகித்து அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கரைசல்களைக் கலந்து இவ்வினைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. முதல் வகை கரைசல் 100 மி.லி. வாலை வடிநீரில் 0.5 கிராம் தாமிர சல்பேட்டை கரைத்துத் தயாரிக்கப்படுகிறது. இரண்டாம் வகை கரைசல் 5% பிரிடீனில் (கன அளவு/கன அளவு) குளோரோஃபார்ம் கரைத்துத் தயாரிக்கப்படுகிறது [1][2]. சோதனையிடப்பட வேண்டிய பொருள் மாதிரியுடன் இவ்விருவகை கரைசல்களின் ஒவ்வொரு துளியை சேர்க்கவேண்டும். பொருளின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை கவனமாக உற்று நோக்க வேண்டும்.

பீனோபார்பிட்டால், பெண்டோபார்பிட்டால், செக்கோபார்பிட்டால் ஆகியன மாதிரிப் பொருளில் இருந்தால் அது இளம் ஊதா நிறத்திற்கு மாறும்.

தேநீர் மற்றும் புகையிலையை இவ்வினைப்பொருள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடும் [1] கலவைகளைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் மெல்லடுக்கு வண்ணப்படிவுப் பிரிகை கறையாக சுவிக்கர் வினைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், தனித்துவமான குறிப்பிடத்தகமை இல்லாமையாலும், தவறான நேர்மறை முடிவுகளைக் கொடுப்பதற்கு வாய்ப்பிருப்பதாலும் இச்சோதனை முறை மருந்துகளை ஊகித்து சோதிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை [3].

டச்சு நாட்டைச் சேர்ந்த கார்னெலிசு சுவிக்கர் இச்சோதனையைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வினைப்பொருள் சுவிக்கர் வினைப்பொருள் என்ற பெயரைப் பெற்றது [4].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 O’Neal, C. L.; Crouch, D. J.; Fatah, A. A. (2000). "Validation of twelve chemical spot tests for the detection of drugs of abuse". Forensic Science International 109 (3): 189–201. doi:10.1016/S0379-0738(99)00235-2. பப்மெட்:10725655. 
  2. "Color Test Reagents/Kits for Preliminary Identification of Drugs of Abuse" (PDF). Law Enforcement and Corrections Standards and Testing Program. July 2000. பார்க்கப்பட்ட நாள் 2011-07-24.
  3. Brandenberger, Hans; Maes, Robert A. A. (1997). Analytical toxicology: for clinical, forensic, and pharmaceutical chemists. Walter de Gruyter. p. 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-010731-9. பார்க்கப்பட்ட நாள் 2012-02-28.
  4. de Faubert Maunder, M. J.. "An improved field test for barbiturates and hydantoins with a modified cobalt(II) thiocyanate reagent" (in en). The Analyst 100 (1197). doi:10.1039/an9750000878. Bibcode: 1975Ana...100..878D. http://xlink.rsc.org/?DOI=an9750000878. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிக்கர்_வினைப்பொருள்&oldid=2749308" இலிருந்து மீள்விக்கப்பட்டது