சுவிஸ் இராணுவக் கத்தி

சுவிஸ் இராணுவக் கத்தி (Swiss Army knife)[1] என்பது ஒரு பையடக்க கத்தி அல்லது பலகருவிச் சேர்க்கை ஆகும். இதை விக்டோரினாக்ஸ் ஏஜி (மற்றும் 2005 வரை வெங்கர் எஸ்.ஏ-யும் ) தயாரித்தது. "சுவிஸ் இராணுவக் கத்தி" என்ற பெயரானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க படையினரால் உருவாக்கப்பட்டது, அவர்களால் அதன் ஜெர்மன் பெயரான "Offiziersmesser", என்ற பெயரை உச்சரிப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் அப்பெயரைக் கொண்டு அழைத்தனர்.[2]

கத்தி சங்கிலி மற்றும் பெல்ட் கிளிப் ஆகியவைக் கொண்ட விக்டோரினோக்ஸ் "ஹண்ட்ஸ்மேன்" ஸ்விஸ் இராணுவக் கத்தி.
வெங்கர் சுவிஸ் இராணுவக் கத்தி.

இந்த சுவிஸ் இராணுவக் கத்தியானது மடித்து வைக்கப்படும் கத்தி என்பதோடு திருப்புளி, சிறிய பிளேடு, நக வெட்டி, தகரவெட்டி சிறிய ரம்பம், கத்திரிக்கோல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இந்த கருவி இணைப்புகள் கைப்பிடியின் மையத்தில் உள்ள மையப் புள்ளியின் மூலம் இயக்கப்படுகின்றன. இதன் அசல் வடிவத்தின் பிடி சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதில் ஒரு சிலுவை காணப்படும். சிவப்பு வண்ணப் பின்னணியில் காணப்படும் வெள்ளைச் சிலுவைதான் சுவிட்சர்லாந்தின் கொடியின் வடிவமும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள இபாக் பகுதியில் 1891 ஆம் ஆண்டு சுவிஸ் இராணுவக் கத்தி முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. கார்ல் எல்செனர், பின்னர் விக்டோரினாக்கஸ் என அழைக்கப்பட்ட நிறுவனம், பழைய ஜெர்மன் உற்பத்தியாளரிடம் இருந்து, 1890 வடிவ ஸ்விஸ் இராணுவக் கத்தியைத் தயாரிக்க ஒப்பந்தத்தைப் பெற்றனர். 1893 ஆம் ஆண்டில் சுவிஸ் கருவி நிறுவனமான பால் போச்சட் & சே, பின்னர் வெங்கர் என அழைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனம், 1890 வடிவ இராணுவக் கத்திகளை தயாரிப்பதற்காக சுவிஸ் இராணுவத்திலிருந்து முதல் ஒப்பந்தத்தை பெற்றது; இரு நிறுவனங்களும் 1908 ஆம் ஆண்டில் இருந்து கத்திகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் பிரித்து, விக்டோரினாக்ஸ் 2005 இல் வெங்கர் வாங்கியது வரை பெற்றுவந்தன. இந்தக் கத்தியானது சுவிச்சர்லாந்தின் ஒரு கலாச்சார சின்னமாகவும், கத்தி வடிவமைப்பு மற்றும் அதன் பல்திசையியக்கத்திறம் உலக அங்கீகாரத்தைப் பெற வழிவகுத்தது.[3]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. பிரெஞ்சு மொழி: couteau suisse: "Swiss knife", இடாய்ச்சு மொழி: Schweizer Offiziersmesser: "Swiss officer's knife", வார்ப்புரு:Lang-ch: "Pocket knife", இத்தாலியம்: Coltellino svizzero: "Swiss pocket knife"
  2. "Victorinox Swiss Army Knives Info". Victorinox. பார்க்கப்பட்ட நாள் 2008-09-18.
  3. Foulkes, Imogen (2009-07-30). "From humble tool to global icon". BBC News. http://news.bbc.co.uk/2/hi/europe/8172917.stm. பார்த்த நாள்: 2011-10-31. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிஸ்_இராணுவக்_கத்தி&oldid=2441274" இலிருந்து மீள்விக்கப்பட்டது