சுவ்ரி பூநாரை முனை பம்பாய்

மும்பையில் உள்ள பூநாரைகள் உய்விடம்

சுவ்ரி பூநாரை முனை மும்பை (Sewri Flamingo Point Bombay) என்பது இந்தியாவின், மகாராட்டிர மாநிலத்தில், மும்பையின் சுவ்ரி பகுதிக்கு அருகில் உள்ள ஒரு இடம் ஆகும். [1]

சுவ்ரி பூநாரை முனையானது மும்பையின் சுவ்ரி தொடருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், 20 நிமிட நடை தூரத்தில் உள்ளது.

இந்த முனையில் சதுப்பு நிலத்தின் பெரிய பகுதிகள் உள்ளன. அவை குளிர்காலத்தில் பூநாரைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடமாக இருப்பதுடன், போதுமான உணவு கிடைக்கும் இடமாகவும் உள்ளது. ஒவ்வோராண்டும் பூநாரைகள் தங்கள் இனப்பெருக்கப் பகுதியான குசராத்தின் கட்ச் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தங்கள் குஞ்சுகளையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தடைகின்றன. அவை அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வந்து தங்குகிறன. [2] [3] மற்ற பறவை இனங்களும் உணவுக்காக இங்கு வருகின்றன. [4] [5]

படக்காட்சியகம்

தொகு

இதையும் பார்க்கவும்

தொகு

சுவ்ரி

குறிப்புகள்

தொகு

 

  1. "Sewri Mangrove Park". Sewri Mangrove Park.
  2. "Homecoming for lesser flamingos in Sewri". 9 February 2012. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Homecoming-for-lesser-flamingos-in-Sewri/articleshow/11815949.cms. 
  3. "Mumbai's Sewri mudflats must await pink-feathered flamingos". 23 December 2011.
  4. "Bird Watching at Sewri Jetty – Flamingos in Mumbai". Wannabemaven. 9 February 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.
  5. "Sewri Bay, Mumbai". Birds of India. Archived from the original on 18 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.

வெளி இணைப்புகள்

தொகு