சு. அனந்த ராமகிருட்டிணா
சுப்பிரமணியன் அனந்த ராமகிருட்டிணா (Subramanian Anantha Ramakrishna) என்பவர் கான்பூர், இந்திய தொழிநுட்ப கல்வி நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். ஒளியியலும் சுருங்கிய பொருள் இயற்பியலும் இவருடைய நிபுணத்துவ இயற்பியல் பிரிவுகளாகும். இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2016 ஆம் ஆண்டு அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் சிறந்த பங்களிப்பிற்காக இவருக்கு வழங்கப்பட்டது [1]. இவர் தன்னுடைய முதுநிலை அறிவியல் பட்டத்தை 1995 ஆம் ஆண்டு இந்திய தொழிநுட்ப கல்வி நிறுவனம் கான்பூரில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பின் மூலம் பெற்றார். தன்னுடைய முனைவர் பட்டத்தை பெங்களூரிலுள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில், பேராசிரியர் குமார் அவர்களின் மேற்பார்வையில் ஒளிக் கடத்தலும் செயல் மற்றும் செயலற்ற ஊடகத்தில் ஒளி பரவலும் என்பதான தலைப்புடன் தொடர்புடைய ஆய்வுகள் மேற்கொண்டு நிறைவு செய்தார். இலண்டன் இம்பீரியல் கல்லுரியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிபேராசியராகப் பணிபுரிந்து தற்போது பேராசிரியராக பணிபுரிகிறார் [2].
விருதுகள்
தொகு- இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சுவர்ணசெயந்தி உறுப்பினர் விருது.
- கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிருவனத்தில் பி.கே. கேல்கர் ஆராய்ச்சி உறுப்பினர்
- மூன்றாம் உலக அறிவியல் அகாதமியின் 2007-2012 ஆண்டுக்காண இளையவராக சேர்க்கை
- இந்திய தேசிய அறிவியல் அகாதமி டில்லியின் 2007 ஆம் ஆண்டு இளம் விஞ்ஞானி பதக்கம்
- பெங்களூர், இந்திய அறிவியல் அகாதமியின் இளம் விஞ்ஞானி (2004-2007)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.
- ↑ "Profile of S. Anantha Ramakrishna". Indian Institute of Technology, Kanpur. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.