சூசன் பிரவுன் அந்தோனி
சூசன் பிரவுன் அந்தோனி (Susan B. Anthony, பெப்ரவரி 15, 1820 – மார்ச் 13, 1906) என்பவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர். சமுதாய சம உரிமைக்காகப் போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை முறைக்கெதிராகப் போராடினார். 1856 இல் அடிமை முறைக்கெதிரான நியூயார்க் நகர அமைப்பின் முகவராக நியமிக்கப்பட்டார். மது குடிப்பதையும் எதிர்த்துப் பரப்புரை செய்தவர் ஆவார்.
சூசன் பிரவுன் அந்தோனி | |
---|---|
பிறப்பு | சூசன் பிரவுனெல் அந்தோனி பெப்ரவரி 15, 1820 ஆடம்சு, மாசச்சூசெட்சு, அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 13, 1906 இரோசெச்டர், நியூ யோர்க், அமெரிக்கா | (அகவை 86)
அறியப்படுவது |
|
கையொப்பம் |
1872 இல் சூசன் அந்தோனி அவரது பிறந்த இடமான இரோசெசுட்டரில் தேர்தலில் வாக்களித்தமைக்காக கைது செய்யப்பட்டார்.[1] இவர் மீதான வழக்கு விசாரணை அக்காலத்தில் பெரிது பிரசாரப்படுத்தப்பட்டது.[2] இவருக்கு $100.00 தண்டம் விதிக்கப்பட்டது.[3] ஆனாலும் அவர் தண்டம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் மீத்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[4] 1878 இல், அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்ரத்தில்]] பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார். மேலவை உறுப்பினர் ஆரன் சார்செண்ட் என்பவர் இத்திருத்ததை அறிமுகப்படுத்தினார். இறுதியில் 1920 ஆம் ஆண்டில் 19-வது திருத்தச்சட்டம் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gordon (2005), pp. 11, 13, 29
- ↑ Hewitt (2001), p. 212
- ↑ Gordon (2005), p. 47
- ↑ Gordon (2005), p. 18
- ↑ "Senators to Vote on Suffrage Today; Fate of Susan B. Anthony Amendment Hangs in Balance on Eve of Final Test". The New York Times. September 26, 1918. https://query.nytimes.com/gst/abstract.html?res=F60F17F63E5511738DDDAF0A94D1405B888DF1D3.
- ↑ Doig, Leslie L. (2008). Smith, Bonnie G. (ed.). The Oxford Encyclopedia of Women in World History. Oxford University Press. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514890-9.
நூல்கள்
தொகு- Bacon, Margaret Hope (1986). Mothers of Feminism: The Story of Quaker Women in America. San Francisco: Harper & Row. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-250043-0