சூசெட் ஜோர்டன்

சூசெட் ஜோர்டன் (Suzette Jordan, 1974 - 13, மார்ச் 2015) பாலியல் வல்லுறவுக்கு எதிராகப் போராடியவர். கொல்கத்தாவின் புகழ்பெற்ற வணிகவீதிகளுள் ஒன்றான பார்க் ஸ்ட்ரீட்டில் பாலியல் வல்லுறவுக்குத் தாம் உள்ளானதைத் துணிச்சலாக 2013ல் வெளியுலகிற்கு அறிவித்ததன்மூலம் "பார்க் ஸ்ட்ரீட் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்" என்றே பரவலாக அறியப்பட்டார்.[1][2] 'பாதிக்கப்பட்டவர்' என்பதனைவிட அத்தகைய நிகழ்விலிருந்து 'மீண்டெழுந்தவர்' என்பதற்கே சான்றாகத் திகழ்ந்த அவர் தமது 40-வது அகவையில் மூளைக்காய்ச்சலால் உடல்நலம் குன்றி கொல்கத்தாவில் உயிரிழந்தார்.[1]

மேற்கூறிய பாலியல் வல்லுறவுச் சம்பவம் பிப்ரவரி 2012ல் நிகழ்ந்தது. இந்திய சட்டப்படி வல்லுறவில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அவரது அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற நிலையில் அந்த உரிமையை மறுதலித்து ஜூன் 2013ல் தனது அடையாளத்தை பகிரங்கப்படுத்தியபோது அவர் கூறியதாவது: "

"அது எனது தவறில்லை எனும்போது நான் ஏன் அடையாளத்தை ஒளிக்கவேண்டும்? எனது செயலால் நடக்காத ஒன்றுக்கு நான் ஏன் வெட்கமடைய வேண்டும்? நான் மிருகத்தனத்துக்கு உள்ளாக்கப்பட்டேன், சித்திரவதைக்கு ஆளானேன், வன்கலவி செய்யப்பட்டேன், அதனால் நான் போராடுகிறேன், போராடுவேன்.[3]

—Suzette

அவரது மரணத்தின்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. அம்மூவரும் தங்கள் மீது சாட்டப்பட்டக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை; முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட மற்ற இருவர் கைதுசெய்யப்படவில்லை.[4]

ஜோர்டான் பெண் உரிமைகளுக்கானச் செயற்பாட்டாளராகப் பணியாற்றினார். பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பிற்காக ஆலோசனை வழங்குவோராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.[5]

மரணம்

தொகு

சூசெட் ஜோர்டன் 40 ஆவது அகவையில் மூளைக் காய்ச்சல் நோயால் மார்ச் 13, 2015 அன்று மரணமடைந்தார். அவரது இறுதிநாட்களில் அவரது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Suzette Jordan: India anti-rape campaigner dies after illness". BBC News www.bbc.com. 13 March 2015. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
  2. "Park Street Rape Survivor Suzette Jordan, Who Took On Bengal Government, Dies". NDTV www.ndtv.com. ndtv.com. 13 March 2015. http://www.ndtv.com/india-news/park-street-rape-survivor-suzette-jordan-who-took-on-bengal-government-dies-746256. பார்த்த நாள்: 14 March 2015. 
  3. Jha, Rupa (21 June 2013). "Why an India rape victim disclosed her identity". BBC News www.bbc.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
  4. "Park Street rape victim Suzette Jordan dies in Kolkata". Press Trust of India india.com. us.india.com. 13 March 2015. http://us.india.com/news/india/park-street-rape-victim-suzette-jordan-dies-in-kolkata-314829/. பார்த்த நாள்: 14 March 2015. 
  5. Mohan, Shriya (3 July 2013). "How Do You Survive Being Named ‘The Park Street Rape Victim’?". Yahoo News India in.news.yahoo.com. https://in.news.yahoo.com/how-do-you-survive-being-named-%E2%80%98the-park-street-rape-victim%E2%80%99--054758334.html. பார்த்த நாள்: 14 March 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசெட்_ஜோர்டன்&oldid=2212309" இலிருந்து மீள்விக்கப்பட்டது