சூடேற்றி (Heater) என்பது வெக்கையான அல்லது சூடானக் காலத்தில் வசிப்பிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி போன்று, குளிரான காலங்களில் வசிப்பிடச் சுவர்களில் பொருத்தப்படும் அல்லது வசிப்பிடங்களில் வைக்கப்படும் சூடை ஏற்றும் ஒரு மின்னியல் சாதனமாகும். இந்தக் கருவியினுள் கம்பிச்சுருள் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இக்கம்பிச் சுருளின் வழியாக மின்சாரம் செல்லும் போது அந்தக் கம்பிச் சுருளானது வெப்பமடைகிறது. இவ்வாறு பெறப்படும் வெப்பமானது வெப்பக்கடத்தல் விதிகளின் படி அறையை கதகதப்பாக்குகிறது.

இத்தகைய கருவிகளில் பெறப்படும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு உண்டு. இவை அநேகமாக குளிர் பிரதேச நாடுகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இத்தகைய சூடேற்றிகள் பெரிய மின்சாரப் பகிர்மான நிலையங்களின் கருவிகளுக்கு உள்ளேயும் பொருத்தப்பட்டிருக்கும். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக மின்சாரக் கருவிகள் பழுதாவதைத் தவிர்க்க இத்தகைய சூடேற்றிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடேற்றி&oldid=2744541" இலிருந்து மீள்விக்கப்பட்டது