சூரியக் காற்று
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூரியக் காற்று (solar wind) என்பது சூரியனின் மேல் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஏற்றமுள்ள துணிக்கைகளின் கூட்டம் ஆகும். இது பொதுவாக இலத்திரனாலும், புரோத்திரனாலும் ஆனது. இதன் சக்தி 1.5 தொடக்கம் 10 keV வரை வேறுபடும். சூரிய உட்கருவின் (Corona) அதிகமான வெப்பத்தாலும், அதிகமான இயக்க ஆற்றலாலும் இத்துணிக்கைகள், சூரியனின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்லக் கூடியவை இயல்புடையவை ஆகும். இக்காற்றில் கொண்டு வரப்படும் துணிக்கைகளே, வடமுனை ஒளியைத் தோற்றுவிப்பவை ஆகும்.

