சூரியத் தொலைநோக்கி

சூரியத் தொலைநோக்கி (Helioscope) என்பது சூரியனையும் சூரியப்புள்ளிகளையும் உற்றுநோக்கி ஆராய உதவும் ஒரு கருவியாகும். 1578 முதல் 1643 வரையிலான காலத்தைச் சார்ந்த பெனிதெட்டோ காசிடெல்லி முதன்முதலில் இத்தொலை நோக்கியை உபயோகித்தார். பின்னர் 1564 முதல் 1642 வரையிலான காலத்தைச் சார்ந்த கலீலியோ இத்தொலை நோக்கியை மேம்படுத்தினார். தொலைநோக்கியைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு வெள்ளைக் காகிதத்தில் படம்பிடிப்பது இம்முறையின் வழிமுறையாகும்[1][2]

Alt
சிகீனரின் சூரியத் தொலைநோக்கி

1575 முதல் 1650 வரையிலான காலத்தைச் சார்ந்த கிரிசுதோப் சிகீனர் அவருடைய சூரியப்புள்ளி உற்றுநோக்கல் ஆய்வுக்கு உதவியாக முதன்முதலில் சூரியத் தொலைநோக்கியை வடிவமைத்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Helioscope - Museo Galileo
  2. Helioscope video - Museo Galileo
  3. Scheiner, Christoph (1630). Rosa Ursina. பக். 137–8.  (Latin)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியத்_தொலைநோக்கி&oldid=3692368" இலிருந்து மீள்விக்கப்பட்டது