சூரியமாதம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூரிய மாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள்.