சூரிய ஒளி மண்டலம்
கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் (Sun light Zone) அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் (Photic zone) என்று அழைக்கிறார்கள்.
இது கடலின் மேற்பரப்பிலிருந்து ஒளியின் அடர்த்தி 1% ஆகக் குறையும் வரை உள்ள பகுதி ஆகும். இந்த ஆழம் ஏறத்தாழ சுமார் 200 மீ வரை இருக்கும் . ஆனால் பாசி மற்றும் மாசடைந்த நீர் நிலைகளில் இது சற்று மாறுபடலாம். இந்த அளவு ஆழத்தில் மட்டும் 90% உயிரினங்கள் வாழ்கின்றன.குறைந்த அளவு உயிரினங்கள் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் வாழ்கின்றன.
நீரின் ஒளி ஊடுருவும் தன்மையைப் பொறுத்து சூரிய ஒளி மண்டலத்தின் ஆழம் மாறுபடுகிறது, Secchi வட்டு என்ற கருவியின் உதவியுடன் இந்த சூரிய ஒளி மண்டலத்தின் ஆழத்தை அளவிடமுடியும்.