சூரிய சதகம்

மயூரசன்மன் என்பவரால் எழுதப்பட்ட நூல்

சூரிய சதகம் என்பது மயூரசன்மன் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். [1] மயூரசன்மன் கடவு தேசம் என்னும் நாட்டின் அரசனாவான். அவன் சிறந்த கவிஞராகவும், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தார். சில காலம் கண்கள் தெரியாமல் இருந்தார். அவர் பார்வை பெறுவதற்கு பல்வேறு தலங்களுக்குச் சென்றுவந்தார்.

காஞ்சிபுரம் கச்சபேச்வரர் கோயிலில் சூரிய தீர்த்ததில் நீராடி, சிவபெருமானை வணங்கினார். அவருக்கு கண்கள் பார்வையை மீண்டும் கிடைத்தது. தனக்கு கண்பார்வை கிடைத்தமைக்காக சூரியன் பெயரில் 100 வடமொழி பாடல்கள் கொண்டதாக நூலினை எழுதியுள்ளார். இந்நூலின் பாடல்கள் சில காஞ்சிபுரம் கச்சப்பர் கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன.

ஆதாரங்கள் தொகு

  1. தினமலர் பக்திமலர் 08.01.2015 பக்கம் -3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_சதகம்&oldid=3177888" இலிருந்து மீள்விக்கப்பட்டது