சூரிய நடுக்கம்

சூரிய நடுக்கம்

சூரிய நடுக்கம்

பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் மேலே நிலப் புறவோடுகள் நகர்ந்து மோதுவதாலும் பிற காரணங்களாலும் நிலநடுக்கமாக வெளிப்படுகிறது. வளிமங்களால்[1] ஆன கதிரவனில் கெட்டியான ஓடுகள் இல்லாவிட்டாலும்கூட பூமியின் நிலநடுக்க அலைகளை அலசுவது போன்றே சூரியனின் புற அமைப்புப் பகுதியில் எழும் அலைகளை அலசுவதால் உள்ளே நிகழ்வதையும் நன்றாக விளக்குகின்றது என்று அறிந்திருக்கின்றார்கள்[2]. இவ்வகையான விளைவுகளால் கதிரவமேல் பரப்பில் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு (Solar Flares) களாக இவை வெளிப்படுகிறன.

பூமியின் நிலநடுக்க அலைகளைப் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. " 5 மணித்துளி அதிர்வு" என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி எர்ட்ஸ் (millihertz) அதிர்வு ஏற்படும். இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.

கதிரவைன் புறப்பரப்பில் ஏற்படும் 5-மணித்துளி அதிர்வு அதிர்வலையின் வீச்சு

.

சோஃகோ (SOHO) எனப்படும் கதிரவனும் அதன் அணியப் புறமண்டலத்தின் கூர்நோட்டகம், (சோலார் அண்ட் எலியோசுஃவியர், Solar and Helioshpere Observatory SOHO) என்னும் NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறது. அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. கதிரவனில் ஏறத்தாழ 75% ஐதரசனனும் 23% ஈலீயமும் உள்ளன. மீதம் இரண்டு விழுக்காடு மட்டுமே இரும்பு, கரிமம், ஆக்சிசன், நியான் போன்ற பொருள்கள்.
  2. Basu, S.; Antia, H.M. (2008). "Helioseismology and Solar Abundances". Physics Reports 457 (5–6): 217. doi:10.1016/j.physrep.2007.12.002. arXiv:0711.4590. 

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_நடுக்கம்&oldid=2303652" இலிருந்து மீள்விக்கப்பட்டது