சூரிய நாட்காட்டி

சூரிய நாட்காட்டி (Solar Calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி ஆகும். மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.

காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்

தொகு

சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது.

கீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:

மேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன.

விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்

தொகு

புவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால், அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன.

இந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன.

சூரியசந்திர நாட்காட்டிகள்

தொகு

சூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது.

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_நாட்காட்டி&oldid=3629802" இலிருந்து மீள்விக்கப்பட்டது