சூரிய வான் இணையல்
பூமியிலிருந்து காண்கையில் இன்னொரு கோள், வானியல் பொருள்கள் அல்லது விண்கலம், சூரியனுக்கு பின்னே நேர் எதிராக அமைந்து இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சூரிய வான் இணையல் (Solar conjunction) ஆகும்.ஆதாவது பூமிக்கும் இன்னொரு கோளுக்கும் இடையில் சூரியன் இருக்கும். சூரிய வான் இணையலின் போது சூரியன் இடையில் வருவதால் விண்கலத்துடன் தொடர்பு கொள்வது தடைபடும்.[1]
விண்கலம் தொடர்பான பிரச்சனைகள்
தொகுவிண்கலத்தின் இடத்தைத் தொடர்ந்து கண்காணிக்க, விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள வானலை வாங்கி (Antenna), புவியிலுள்ள வானலை வாங்கியுடன் நீண்ட நேரம் தொடர்பில் இல்லாமல் இருந்தால், அவை சூரியனின் அலைகளைப் பின் தொடர வாய்ப்பு உள்ளது.ஏனெனில் சூரியனால் உருவாக்கப்படும் மின் காந்த அலைகள், வானலை வாங்கியால் (Antenna) அனுப்பப்படும் சமிக்ஞை அலைகளை விட மிக வலிமை வாய்ந்தது.
இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நாசாவால், செவ்வாயின் தரைப்பரப்பில் இயக்கப்படும் கியூரியோசிட்டி தரையுளவி, சூரிய வான் இணையலின் போது 25 நாட்கள் தனித்தியங்கு அமைப்பிற்கு மாற்றப்பட்டது.இதனால் கியூரியோசிட்டி தரையுளவியின் அனைத்து நகர்வுகளும் நிறுத்தப்பட்டது.பூமியோடு தொடர்பு கொள்ளமல் செய்யப்படும் வானிலைத் தகவல் சேமிப்புப் பணியை மட்டும் செய்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Khan, Amina (2013-04-05). "NASA Mars Curiosity rover gets to work on 'spring break' chores". Los Angeles Times. http://www.latimes.com/news/science/sciencenow/la-sci-sn-mars-curiosity-working-conjunction-spring-break-20130405,0,2992673.story. பார்த்த நாள்: 2013-04-07.