சூரிய வெப்ப ஆற்றல்

சூரிய வெப்ப ஆற்றல் என்பது சூரிய ஒளியைப் பயன்படுத்தி வெப்ப ஆற்றலை உருவாக்கும் செயலாகும். இந்த செயலின்போது சூரிய ஒளியை உறிஞ்சியும் குவித்தும் வெப்ப ஆற்றல் உருவாகிறது. சூரிய வெப்ப ஆற்றல் பல பயன்பாடுகளைக் கொண்டிருந்தாலும், பொதுவாக சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.[1][2][3]

நீரைச் சூடாக்குவதற்கான சூரிய வெப்ப ஆற்றல் அமைப்பு (கிரேக்க நாட்டில்).

சூரிய வெப்ப ஆற்றல் பயன்பாடு மூன்று வகைப்படும். அவை குறைந்த, நடுத்தர அல்லது உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றல் முறைகளாகும். குறைந்த வெப்பநிலை வகையில் தட்டை வடிவ சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி பயன்படுகிறது. இது நீச்சல் குளங்களை சூடேற்றப் பயன்படுகிறது. நடுத்தர வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி நீரைச் சூடேற்றவும் சமைப்பதற்கும் பயன்படுகிறது. உயர் வெப்பநிலை சூரிய வெப்ப ஆற்றல் மாற்றி மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வகையில் சூரியக் கதிர்கள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_வெப்ப_ஆற்றல்&oldid=4099056" இலிருந்து மீள்விக்கப்பட்டது