சூர்தாசர்

இவர் உயர்ந்த ஞானி, நல்ல சமயபரப்புநர், சிறந்த சீர்திருத்தவாதியாவார்.இவர் மதுரா அருகில் 1478ல் பிறந்து 1581 வரை வாழ்ந்தார். இந்தியில் மிகச் சிறந்த நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் அனைத்தும் தான் விரும்பும் தெய்வத்தின் பால் செலுத்த வேண்டிய அன்பையும் பக்தியையும் விளக்குகின்றார். இவர் எழுதிய சூர்சாகர் என்ற நூல் அன்பு, பக்தி இவற்றின் மேன்மையையும் கண்ணனைக் குழந்தையாய் கருதி சித்தரிக்கும் அற்புத நிலையையும் விளக்குகிறது. இவர் “வாழ்வு ஒரு விளையாட்டு, வீர தீரச் செயல், ஆனால் போராட்டமன்று; ஏமாற்றம் மிக்க கதையும் அன்று” என்கிறார். இவரது கவிதைகள் மனித இனத்தின் பால் வியத்தகு விளைவை ஏற்படுத்தியதுடன் பக்தி நெறியின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்தாசர்&oldid=2692801" இருந்து மீள்விக்கப்பட்டது