சூர்யகாந்தன்
சூர்யகாந்தன் கவிதை, சிறுகதைகள்,[1] புதின எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதமிழநாடு கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ராமசெட்டி பாளையம் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முதுகலைமாணி, முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார். கோவை அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
எழுத்துலகில்
தொகுஇவரின் முதல் கவிதை 1973 ஆம் ஆண்டு ”மனிதன்“ என்ற இலக்கிய இதழில் ”உழைக்கும் வர்க்கம் உறங்குமோ“ எனும் தலைப்பில் வெளியானது. சிறுகதை 1974 ஆம் ஆண்டு “தாமரை” இலக்கிய இதழில் “தண்டிக்கப்படாத குற்றவாளிகள்” எனும் தலைப்பில் வெளியானது. இதுவரை மூன்று கவிதைத்தொகுதிகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள், பதினொன்று சிறுகதைத்தொகுதிகள், 11 சமூக நாவல்கள் நுல்களாக வெளிவந்துள்ளன. இவர் படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
புதினங்கள்
தொகுஅகிலன் நாவல் போட்டியில் பரிசு பெற்ற மானாவரி மனிதர்கள்,[2] விதைச்சோளம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ "மண்வாசனை மிகுந்த `மானாவாரி மனிதர்கள்'- விருதுபெற்ற நாவலாசிரியர் சூர்யகாந்தன்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.