சூறாவளி ஆண்ட்ரூ

சூறாவளி ஆண்ட்ரூ ,1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவைத் தாக்கியது. அந்த மாநிலத்தைத் தாக்கிய மிகுந்த அழிவுகரமான சூறாவளி. இது 5வது  வகையைச் சார்ந்த அட்லாண்டிக் சூறாவளி ஆகும். அமெரிக்காவில் கரையை கடந்த சூறாவளிகளில் அதிக செலவை ஏற்பபடுத்தியது. 2005 ஆம் ஆண்டில் அது கத்ரீனாவால் முறியடிக்கப்பட்டது . பஹாமாஸ் மற்றும் லூசியானாவில் ஆண்ட்ரூ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது . ஆனால் 165 மைல் (270 கிமீ / மணி) காற்றின் வேகத்துடன் தென் புளோரிடாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது .மியாமி-டேட் கவுண்டியில் உள்ள ஹோஸ்டெஸ்ட்டின் வழியாக நேரடியாகச் சென்றது, அது பல வீடுகளில் இருந்து கான்கிரீட் அடித்தளங்கள் அகற்றிப் போட்டது . மொத்தத்தில், இது 63,500 க்கும் அதிகமான வீடுகளை அழித்தது. 101,000 க்கும் மேற்பட்ட இதர   சேதங்களை ஏற்படுத்தியது . 26.5 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது மற்றும் 65 பேர் இறந்தனர்.

ஆகஸ்ட் 16 அன்று கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஆண்ட்ரூ ஒரு வெப்பமண்டல தாழ்வளுத்தமாக உருவானது. ஒரு வாரம் கழித்த பிறகும் மைய அட்லாண்டிக் பகுதியில் கணிசமாக வலுப்பெறாமல் இருந்தது. ஆகஸ்ட் 23 அன்று பஹாமாஸுக்கு மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது அது கடுமையான வலுவான பிரிவு 5 சூறாவளியாக தீவிரமடைந்தது. தீவு நாட்டை பயணித்த போது, பகுப்பு 4 க்கு அது பலவீனமடைந்தது என்றாலும், எலியட் கீ மற்றும் ஹோமஸ்டெட்டில் கரையை கடக்கும் முன்னதாக அதன் பிரிவு 5 நிலையை மீண்டும் பெற்றது.[1][2][3]

புளோரிடாவில், 922 mbar (27.23 inHg) பாரமெட்ரிக் அழுத்தத்துடன் கரையைக் கடந்தது. ஆண்ட்ரூ அமெரிக்காவில் அடித்த நான்காவது மிகவும் கடுமையான சூறாவளி ஆகும். பல மணி நேரம் கழித்து, சூறாவளி மெக்சிக்கோ வளைகுடாவில் பிரிவு 4 வலிமையிருந்தது. அதன் பாதையில் அமெரிக்காவின் வளைகுடா கடற்கரையும் இருந்தது. வடமேற்குப் பகுதியில்  திரும்பி, மேலும் வலுவிழந்தது. லூசியானா, மார்கன் சிட்டிக்கு அருகே ஆண்ட்ரூ கடற்கரையில் வகை 3 புயலாக வலுவிழுந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kym Klass (May 21, 2021). The Wrath of Hurricane Andrew on Biscayne Bay. Islander Media (Report). Key Biscayne, Florida. பார்க்கப்பட்ட நாள் October 10, 2021.
  2. David Olinger (October 11, 2005). "Hurricane Andrew – The Diary of Devastation". Tampa Bay Times. https://www.tampabay.com/archive/1992/08/30/diary-of-devastation. 
  3. Brian Lada (July 10, 2019). "By the numbers: Michael ranked as 3rd-most intense hurricane to hit continental US". AccuWeather. Archived from the original on October 12, 2018. பார்க்கப்பட்ட நாள் October 11, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_ஆண்ட்ரூ&oldid=4099066" இலிருந்து மீள்விக்கப்பட்டது