சூழலியல் உறுதிப்பாடு

சூழலியல் உறுதிப்பாடு (Ecological stability) என்பது, புத்துயிர்ப்பில் தொடங்கி நெகிழ்வுத்தன்மை ஊடாக நிலையானதன்மை, உறுதிநிலை வரையான எல்லைக்குள் அடங்கக்கூடிய பலவகைப்பட்ட உறுதிப்பாடுகளைக் குறிக்கும். இதற்கான சரியான வரைவிலக்கணம், குறித்த சூழ்நிலைமண்டலத்திலும், ஆர்வத்துக்குரிய மாறிகளிலும், முழுதும் தழுவிய சூழ்நிலையிலும் தங்கியுள்ளது. காப்புச் சூழலியலில், இனத்தொகை சார்ந்த உறுதிப்பாடு என்பது, இனங்கள் அழிந்துபோகாமல் இருப்பதைக் குறிக்கும். அமைப்பு இயங்கியலில் இருந்து கணித மாதிரிகளைப் பயன்படுத்தும் ஆய்வாளர்கள் லியாப்புனோவ் உறுதிப்பாடு என்பதைப் பயன்படுத்துகின்றனர்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Justus, James (2006). "Ecological and Lyanupov Stability" (PDF). Paper presented at the Biennial Meeting of The Philosophy of Science Association, Vancouver, Canada.
  2. Justus, J (2008). "Ecological and Lyanupov Stability". Philosophy of Science 75 (4): 421–436. doi:10.1086/595836. https://archive.org/details/sim_philosophy-of-science_2008-10_75_4/page/421. (Published version of above paper)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_உறுதிப்பாடு&oldid=3520892" இலிருந்து மீள்விக்கப்பட்டது