கலையரசி (சீன அறிவிப்பாளர்)

(சூ சுவெங் வா (கலையரசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூ சுவெங் வா (Zhu Juan Hua) என்பவர் ஒரு சீனப் பெண்ணாவார். இவர் கலையரசி என தனது பெயரை தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டு, சீனா, பீஜிங்கில் ஒலிப்பரப்பாகும் சீனத் தமிழ் வானொலியின் இயக்குநராகவும் முதன்மை தமிழ் அறிவிப்பாளராகவும் 1975 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். அத்துடன் தமிழ்நாடு தஞ்சாவூர் சென்று தமிழ் கற்ற இவர் தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.[1]

கலையரசி
கலையரசி, சீனத் தமிழ் வானொலியின் தமிழ் அறிவிப்பாளர்
பிறப்புசூ சுவெங் வா
தேசியம்சீனர்
பணிஅறிவிப்பாளர்
பணியகம்சீன வானொலி நிலையம்
அறியப்படுவதுசீனத் தமிழ் வானொலியின் தமிழ் அறிவிப்பாளர்

கலையரசியின் கூற்றின் படி

தொகு

சீனத் தமிழ் வானொலியின் அறிவிப்பாளரான கலையரசியின் கூற்றின் படி, பதிவுசெய்யப்பட்ட நேயர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 பேர் இருப்பதாக அறியப்படுகிறது. சீனத் தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழி அனுபவம் உள்ளவர்களாகவும்,[2] மேலும் தமிழ் மொழி கற்றுவரும் சீன மாணவர்கள் இருப்பதாகவும் கலையரசி கூற்றின் ஊடாக அறியமுடிகிறது.[3]

தமிழ் மொழி வளர்ச்சியில் சீனா

தொகு

2012 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஔவை அரங்கம் நிகழ்ச்சியல் கலந்துக்கொண்ட கலையரசி "தமிழ் மொழி வளர்ச்சியில் சீனா" எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என தொடர்ந்த அவர், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தொன்மொழி தமிழ் மீது பற்றுக்கொண்டு அதனை எமது நாட்டில் (சீனாவில்) பரவிடச் செய்யும் வற்றாத தாகத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார். அத்துடன் பண்டைக்கால மொழிகளில் தமிழ் மொழியும் சீன மொழியும் இடம்பெற்றுள்ளன என்ற பெருமை உணர்வுடன் சீனாவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பங்காற்றிவரும் தனது பணிகள் பற்றியும் விவரித்தார். அத்துடன் சீன வளங்களை தமிழ் மொழியிலும், தமிழ் வளங்களை சீன மொழியிலும் கொண்டு சென்று சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பரிமாற்றத்தை வளர்ப்பதன் மூலம் இருமொழியினருக்கும் இடையே என்றும் இருக்கும் தொடர்பை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். இதனை தமிழ் சமூகம் கருத்தில் கொண்டு அதற்கான செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனும் வேண்டுகோள் அவரது ஆய்வுக் கட்டுரையின் வாசிப்பூடாக தென்பட்டது.[4]

சான்றுகள்

தொகு
  1. Chinese Tamil Radio International (CRI), Beijing. - Kalaiarasi
  2. மலர் விழா - Chinese Flower Festival in TAMIL
  3. - Kalaiarasi
  4. சீனாவில் தமிழ் மணம்

வெளியிணைப்புகள்

தொகு